மரணம் பாவத்தின் சம்பளம்
மனிதர்கள் மூன்று நேரமும் சாப்பிடுகிறார்கள். அதற்கான காரணமே slowdown செய்ய தான். தற்போது வங்கிகளில் அதிகமான பணம் வைத்துள்ளனர், வேலை செய்பவர்களும் அதிகமான பணம் பெறுகின்றனர். குறைந்த வேலைக்கு அதிக சம்பளம் பெறுகின்றனர். பழைய கிருத்துவத்தில் தவறிழைத்தாலே சம்பளம் பெறுவார். இல்லையேல் கவனமாக கடந்து செல்வர். அதனடிப்படையில் பார்க்கையில் நான் ஒரு வங்கியில் குறைந்த வேலை செய்து அதிக சம்பளம்(தண்டனை) வாங்குகிறேன். இந்த பணம் ஒவ்வொருமுறையும் நான் மிகவும் வேகமாக வாழ்கிறேன் என்பதை காட்டுகின்றன, அதிக தண்டனைகளை பெறுகிறேன் பெறப்போகிறேன் என்றும் எனக்கு நின்டுவூட்டுகிறது. என்னால் பின்னோக்கி செல்ல இயலவில்லை. விழிப்புணர்வோடு மெதுவாகவும் வாழ்வதற்கு தெரியவில்லை. மனம் இதை எப்படி reverse செய்ய கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஆனாலும் நான் மெதுவாக வாழ்ந்து குறைந்த சம்பளம் பெற்றோ, குறைந்த சம்பளம் பெற்று மெதுவாக வாழ்ந்தாலோ புற உலக சொந்தங்களின் ஆசைகளை எவ்வாறு தீர்ப்பது. காரணம் புற உலக சொந்தங்களின் அடிப்படை ஆசைகளை தீர்க்கவே இன்று அதிக சம்பளம் தேவைப்படுகிறது.
இந்த வங்கிகள் மற்றும் அமைப்புகள் கணத்திற்கு கணம் என்னை பின் தொடர்கின்றன. எதற்கு ?
மனம் சொல்கிறது. நீ சம்பளத்தை பெற்றுக்கொண்டே இருக்கிறாய். உனக்கு எந்த சுதந்திரமும் இல்லை. வங்கிகளின் surveilence கள் சுதந்திரம் கிடையாது என்பதை நினைவு படுத்துவதற்கான அமைப்புகள்.
ஏ உயிரற்ற அமைப்புகளே, உள்ளசமநிலை இல்லாமல், சுதந்திரமாக கவனமாக இருந்தால் எனக்கு சம்பளம் தருவாயா என்ற ஆசையில் அவ்வப்போது உழன்றுகொண்டிருக்கிறது இந்த மனம் 😀
எது எப்படியோ, மரணம் பாவத்தின் சம்பளம். பாவம் வேகத்தின் சம்பளம். வேகம் மோகத்தின் சம்பளம். மோகம் துன்பத்திற்கு காரணம்.