நட்சத்திரவாசியின் atomic Habits
பல்லாண்டுகளாக வளர்க்கும் மாட்டின் சாணி மற்றும் பால் கொண்டு வாழும் கிரகவாசியின் மகன் மாடு மேய்க்கும் போது சாயங்கால நேரம் நட்சத்திரங்களை பார்த்து பார்த்து வியந்து மாடுமேய்த்துகொண்டே இருந்தான். இருந்தாலும் அவன் வெளிச்சத்தைவிட இருளையே அதிகம் விரும்பினான். காரணம் சில நேரங்களில் நட்சத்திரங்களில் இருந்துவரும் கூர்மையான வெளிச்சம் அவன் கண்கள் கூசுமாறு இருந்தன. இருந்தாலும் ஒரு வழியாக உள்ளசமநிலையை பயிற்சி செய்து அந்த வெளிச்சத்தை உள்ளச்சமநிலையாக பார்க்கதொடங்கிவிட்டான்.ஏற்கவும் தொடங்கிவிட்டான். ஆனால், அக்கிரகம் அவனை விட்டபாடில்லை, வாழ்வு என்ற பயணத்தில் தலைமேல் நட்சத்திரங்கள் போன்ற எண்ணற்ற வெள்ளை பல்புகளை இட்டு அவன் கண்கள்கூசுமாறு செய்தனர். அவன் உயிர் அந்த கூர்மையான எண்ணற்ற வெளிச்சத்தில் கதறியது. என்ன செய்ய அதில் இருந்துகொண்டு தன்னுடைய முதலாளியின் நலனை சிந்தித்தால், வேலை செய்தால் மட்டுமே ஒரு போதைப்பொருள் அவனுக்கு கிடைக்கும் என்றனர். அந்த நட்சத்திரவாசி ஏற்கனவே போதைப்பொருளுக்கு அடிமையாகிப்போனவன் என்பதால் ஏற்க தொடங்கிவிட்டான் அனைத்து கட்டளைகளையும். அக்காலத்தில் அந்த போதைப்பொருளின் பெயர் என்னவோ அவன் கிரகத்தில் "பணம்' என அழைத்துகொண்டு இருந்தனர். உயிரின் கதறல் தாங்க முடியாமல் வெள்ளை கண்ணாடி அணிந்தான், கருப்பு நிற கண்ணாடி அணிந்தான், கருப்பு வண்ணப்ப்பூச்சிகள் கொண்டு சுவர்களை கறுப்பாக்கிக்கொண்டான்.
தனக்குள் கடவுள் இல்லை என கருப்பாக்கிகொண்டான்.
அடிக்கடி பார்க்கும் இயந்தரங்களையும் கருப்பாக மாற்றிக்கொண்டான். இருந்தாலும் அந்த கோடிக்கணக்கான கூர்மையான வெளிச்சம் அவனைவிட்டபாடில்லை. கண்களுக்குள் பாய்ந்துகொண்டே இருந்தது.
என்ன செய்ய அவன் கிரகத்தில் உள்ளவர்கள் வெளிச்சத்தை கட்டாயத்தின் பெயராலே ஏற்றுக்கொண்டுவிட்டனர். இதிலிருந்து எவ்வாறு தப்பிக்க என பல சாகசங்களை செய்தான். உயிரின் அடிப்படை தேவைகளே பல சாகசங்களுக்கு பிறகே கிடைக்கும் அற்புத கிரகம் அது. அந்த கிரகத்தில் ஒரு பொதுப்புரிதல் இருந்தது, அது என்னவென்றால் உயிரின் அடிப்படை தேவைகளுக்கு எதிராக வாழ்ந்தால் மட்டுமே அங்கு தப்பிபிழைக்க முடியும்.
அதற்கும் தயாரானான், பின் ஒரு பொதுப்புரிதலை தன்னுடன் இருக்கும் உயிர்கள் அனைத்தினிடமும் ஏற்படுத்த நினைத்து தோற்றான், பின் குடும்பத்திடம் தோற்றான், எஞ்சியிருந்தது மனைவி ஒருவளே, அவளிடமும் தோற்றான். அவன் மனைவி மிகவும் நல்லவள் கணவன் தோற்பதை விரும்பாதவள். என்ன செய்ய அவன் கிரகத்தின் நடைமுறை அவ்வாறாகவே இருந்ததால், அவனால் ஒன்றுமே செய்ய இயலவில்லை. ஒருவழியாக பிரேதன் என்ற தன் நண்பரிடம் இருந்து இருள்விளக்கு ஒன்று கிடைத்தது, அந்த கிரகத்தில் அந்த இருள்விளக்கின் பெயர் அப்போது "மொழி" என அழைத்துக்கொண்டனர். அதைக்கொண்டு தன் மனைவியிடம் சென்று நீயும் நானும் ஒத்தபுரிதலுக்கு வருவோமா என்றவாறு மீண்டும் மீண்டும் விண்ணப்பித்தான், ஆனால் அது சாத்தியப்படாது போனது. அதிகாரமற்ற விண்ணப்பங்கள் அங்கே ஏற்கப்படுகின்ற நடைமுறை இல்லை என்பதே பின்னாளில் உணர்ந்தான்😀.
வேறு வழி எதும் இன்றி சில பழக்கவழக்கங்களை பொதுபுரிதலுடன் ஏற்படுத்தி மீதி உள்ள வாழ்வை உண்டு தீர்த்துவிடலாம் என நினைத்து
தன்னை தனிமைபடுத்தினான்.
தன் மனைவியையும் அதே பழக்கபின்னலை ஏற்க செய்ய முயன்றான். மீண்டும் மீண்டும் விருப்பம் உண்டா என கேட்டான்.
இதுவே அந்த பழக்கபின்னல்
இரவு நன்றாக உறங்குவது
காலை 4 மணிக்கு எழுவது
Journaling செய்வது-அதற்கான சிறந்த tool உருவாக்குவது
Meditation செய்வது
Brain fog clearing walking meditation
இன்னும் பல வாழ்ந்து எழுதுகிறேன் உங்களுடன் இணைந்து..