எதுக்காக கல்வி

ஒவ்வொரு மனிதனின் மனமும் கட்டுப்பாடுகள் அற்று மாறிக்கொண்டே இருக்கின்றன.  அதனால் கட்டுப்பாடுகள் அவசியம் என்றே தோன்றினாலும்,  உண்மையில் தேவை பொதுப்புரிதல் மற்றும் சமூக உடன்படிக்கை.  

ஒவ்வொரு உயிரும் தனக்கே விரும்பியவாறு வாழ பயணபட விரும்பும் அது ஒரு இயல்பான நகர்வு.  இக்காலத்திற்கு அவசியமில்லாத கட்டுப்பாடுகளால் மற்றும் சென்ற தலைமுறைக்கான சிந்தனை ஓட்டங்களால் நாம் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுவோம்.  நிகழ்கால வாழ்க்கைக்கான வாழும் முறைகளை மற்றும் அறிவியலை கற்க மனிதன் பள்ளிக்கு அழைத்துச்செல்லப்படுகிறான். ஆகவே பள்ளி அதைக்கற்குமாறு அமைய வேண்டும். அவ்வாறு கற்க இயலாதவர்கள் நாடோடிகளாக திரிகிறார்கள். அவ்வாறு திரிந்தபின் இம்மனித சமூகத்துக்கு அவர்கள் கண்ட வெளிச்சத்தை போதித்துவிட்டு செல்ல வேண்டும் என்ற விருப்பம் தியாகிகளிடம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இந்த தியாகிகளுக்கு நிகழ்கால வாழ்வுக்கு ஏற்றார் போல வாழ தெரியாததால் சுதந்திரந்தை இழந்து போய் நிர்கதியாய் நிற்கின்றனர். வேறு வழி இன்றி, மலைகளை சுற்றுவதற்கும் மற்றும் மீண்டும் நாடோடிகளாக உலகை சுற்றுவதற்கு பதிலாக நிகழ்கால புத்தனை தேடுகிறார்கள்,  கிடைக்காது போகையில் கடந்த காலங்களில் வாழ்ந்த இன்னொரு புத்தனின் புத்தகங்களை படிக்க தொடங்குகின்றனர். 

மொத்தத்தில் மலைய சுத்துறதுக்கு தலைய சுத்த முயற்சி செய்றாங்க.  

அப்படியாவது நிகழ்கால வாழ்வுக்கான வாழும் முறைகளை கற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையே அவ்வாறு பயணப்பட ஆரம்பிக்கிறோம். 

நாம் வாழும் காலத்திற்கு மிக அருகாமையில் வாழ்ந்த ஒரு புத்தன் காந்தி,  அவன் வாழ்ந்த அனைவற்றையும் புத்தகங்களாக கூடுமானவரை  உண்மையிடம் இருந்து எந்த பிறழ்வும் இல்லாமல் எழுதி வைத்துவைக்க முயற்சி செய்துள்ளான். அவனிடம் இருந்த வெளிச்சம் சத்தியகிரகம். ஊன்றுவதற்கு இருந்த கட்டை தான் மொழி, 
ஆனால் அவனைகொன்று விட்டார்கள் மூடர்கள். 

நாம் வெளிச்சம் இல்லாமல் வாழ்ந்துவிடுவோமா ?

ஊன்றுவதற்கான கட்டையான மொழி இல்லாமல் வாழ்ந்து விடுவோமா ?

நாமும் எழுதி வைக்கபோகிறோமா?

நம்மிடம் சத்தியாகிரகம் என்ற வெளிச்சம் ஒவ்வொரு நொடியும் இருக்கிறதா?

நாம் உண்மையில் வாழ நினைக்கிறோமா?

நாம் உண்மையில் வாழ்கிறோமா ?

இந்த கேள்விக்கு பதில் தரும்போதாவது உங்களிடம் சத்தியம் இருக்கிறதா எனப்பாருங்கள்.  உங்கள் gene வழி பிறந்த குழந்தைகளும்  இந்த கேள்விகளை சந்திக்கத்தானே செய்வார்கள். 
நீங்களே பதில் கூறுங்கள்,  உங்களிடமே. 

Popular posts from this blog

scrum impediments

மனமும் இதயமும் தூரம் உள்ளவன்

பணம் என்ற முதலுதவி