சட்டங்களும் பொலிசிக்களும் மனசாட்சிகாக வளையுமா?

சில வருடங்களுக்கு முன்பு நான் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக்கொன்று இருந்தேன்.என் மனைவியின் delivery யை plan செய்வதற்காக நான் பணியாற்றிட நிறுவனம் பரிந்துரைத்த insurance நிறுவன agent இடம் சென்று பேசினேன்.  என் மனைவியின் emotional wellness ஐ கருத்தில் கொண்டு டெலிவரிஐ கையாளக்கூடிய birthvillage என்ற midwifery care ல் நாங்கள் டெலிவெரிஐ பிளான் செய்துள்ளோம் என்ற விவரத்தை insurance agent இடம் தெளிவாக கூறிவிட்டு நாங்கள் டெலிவெரிக்காக சென்றோம்.  குழந்தையும் பெற்டெடுத்தோம். 
நீண்ட பயணங்கள்,  பல சங்கடங்கள்,  வலிகள், வேதனைகள்,  அழுகைகள்,  இவற்றிற்கு இடையில் 1 லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்து குழந்தையை பெற்றடுத்த பிறகு மீண்டும் வந்து insurance agent இடம் பில்லை கொடுத்தேன்.  அவர்கள் இந்த நிறுவனம் எங்களுடன் tie up ல் இல்லை,  அதனால் உங்களுக்கு claim எதுவும் தர முடியாது எனக்கூறி விட்டனர்.  அதை மனம் ஏற்காமல் மீண்டும் மீண்டும் விவரங்களை அனுப்பி கேட்டேன்.  என்னவாக கேட்டாலும் இதற்கு claim இல்லை என திட்டவட்டமாக கூறிவிட்டனர்.  நான் பணி செய்யும் நிறுவனம் என்னுடைய நல வாழ்வில் அக்கறைகொள்ள வில்லை என்ற உணர்வு தான் எனக்குள் ஏற்பட்டது.  அதை மேலும் HR கு கொண்டு சென்று  போராடி claim பெற எனக்கும் நேரம் இல்லை,  மற்றவர்களின் நேரத்தையும் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை.  அப்போது என் மனசாட்சி டெலிவெரிக்காக leave எடுத்து பயணம் செய்த செலவு கிட்டத்தட்ட 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கும்,  ஆனால் ஏற்கனவே 1 லட்சம் இழந்தவனான எனக்கு tax exemption-ல் இந்த 2 ஆயிரம் ரூபாயும் கிடைக்காது என்ற அவநம்பிக்கையில் இருந்தேன். காரணம்,  என்னிடம் இருந்த பில்லில் பஸ் ticket மற்றும் சில cancel செய்யப்பட்ட பில் இருந்தது, அதை கொடுத்தால் நேரம் செலவாகிவிடும் என்ற உணர்வே.  இந்த பாலிசிக்களுடன் என்னால் பேச இயலாமல் ignorant ஆக இருந்தேன், மனிதர்களுடனேயே பேச விரும்பினேன். எனக்கு HR ஏன்றால் ஒரு ஐடியாவாகவே இருந்தது, காரணம் HR fire பண்ணிடுவாங்க போன்ற வார்த்தைகளை கேட்டதின் நீட்சி.  அவர்கள் எனக்கு மனிதர்களாக,  அவர்களின் நேரம் எனக்காக தர விருப்பம் இருப்பவர்களாக எனக்குள்ளே எண்ண ஓட்டங்கள் இல்லை.  அதனால் என் நண்பர்கள் சிலபேரின் பேச்சை கருத்தில் கொண்டு ஒரு தவறை செய்தேன். Fake bill ஒன்றை submit செய்தேன்.  செலவு செய்ததற்காக இன்னொருவரிடம் வேறு பில்லை பெற்றுக்கொடுத்தேன்.
Gst எண் பில்லில் சரிவர இல்லாததினால், யாரிடம் இந்த பில்லை பெற்றாய் என என்னை அழைத்து கேட்டனர்,  அப்போது மற்றவர்களை காட்டிகொடுக்க கூடாது என்பதற்காக பில்லில் pune என இட்டுக்கொடுத்ததால் மீண்டும் ஒரு பொய்யை சொன்னேன். பொய் என்னை மனசாட்சியை ஆழமாக சுட்டுவிட்டது, இன்றும் அந்த வலியை சுமந்தே வாழ்கிறேன்.  ஒருபுறம் இந்த பொலிசிக்கள் எனக்கு உதவவில்லை என்ற கோபமும்,  மறுபுறம் HR என்பவர் அவருடைய நேரத்தை என் நலவாழ்விற்காக தர தயாராக இருக்கமாட்டார் என்ற முன்முடிவும், இன்னொருபுறம் என்னுடைய மெதுவாக இயங்கும் பழக்கபின்னலை மற்றவர்கள் அங்கங்கு நோயாக கருத்தியதால் சுய சந்தேகத்திலே வாழ நேர்ந்ததும் ,இன்னொருபுறம் நாங்கள் என்ன தான் டெலிவெரி தேவைக்காக பிரித்து பிரித்து  பயணப்பட்டாலும் 
அதை LTA வாக இந்த பாலிசிக்கள் ஏற்க விடாது என்ற முன் முடிவும்,  மொத்தத்தில் தயக்கத்தில் மனிதர்களுடன் பழக  இயலாமல், பொலிசிக்களிடமும், பொலிஸிக்கல் இதை claim செய்ய அனுமதிப்பதில்லை என்ற முன்முடிவுகளுடனே காலம் கடத்தினேன்.  இவ்வாறான சிந்தனை ஓட்டங்கள் எனக்குள் இருந்தது என்ற சிந்தனை ஓட்டங்கள் அன்று என்னால் கவனிக்ககூட இயலவில்லை. முடிவில் fake பில் கொடுத்தவனாக,  மற்றவர்களின் பெயரை சொல்ல கூடாது என்பதற்காக பொய்யையும் கூறி நானே குற்றம் இழைத்தவனாக ஒத்துக்கொண்டு குற்ற உணர்வோடேயே வாழ்ந்து வருகிறேன். அதை இன்றும் என்னால் கடந்து செல்ல இயலவில்லை. இது போக அப்போது அவர்கள் கொடுத்த வார்னிங் letter HR இடம் உங்கள் பெயரில் இருக்கும் "black" mark என project manager கூறும்போது மிகவும் வலித்தது.  என் உடல் முழுவதும் black ஆக தான் இருக்கிறது, எவ்வாறு தவறை கருப்போடு link செய்கிறார்கள் என இன்னும் என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை.
என்ன செய்ய புற உலக அனைத்து கட்டளைகளும் சட்டமும் பொலிசியும் என் மனசாட்சியும் வேறு வேறு திசையில் நின்று விட்டதால் இன்றும் குற்றஉணர்விலேயே இருக்கிறேன். மனதின் இருமைகளில் ஒருபுறம் குற்றம் இழைக்காமலே குற்றத்தை சுமப்பவனாகவும் இன்னொருபுறம் பொய் உரைத்ததனால் இந்த தண்டனை கிடைத்ததா என்ற கேள்விகளுடன் உழன்று கொன்று இருக்கிறேன். 

என்னுடைய இக்னோரன்சால் நான் என்மேல் தொடுக்கும் வன்முறைகளை நினைக்கும் போது சில நேரம் மனம் துவண்டு விடுகிறேன். 

Popular posts from this blog

scrum impediments

மனமும் இதயமும் தூரம் உள்ளவன்

பணம் என்ற முதலுதவி