அநித்தியம்

நான் அலுவலக வேலைல நெறைய வருடம்  கடினமா உழைக்க விரும்புனவன்,  என் மனசாட்சி படி தான் வேல செய்ய விரும்புவேன்.  வேலைக்கு உண்மையா இருப்பேன்.  வேலைக்கு பொய்யாவும்,  மேல் அதிகாரிகிட்ட தாஜா பண்ற போழையும் இருந்ததுள்ள,  அதுக்கு விரும்புவதும் இல்ல. ஆனா மனிதர்களிடம் பொய்யுரைக்கவோ,  மனிதர்களின் எண்ண ஓட்டத்தின்பால் அடித்து செல்ல விரும்பாதவன். முயற்சி செய்து பார்த்தும் அது உண்மையின் ஒத்திசைவா படவில்லை.  ஆனா,  நீண்ட நாளா எனக்கான நட்பு பாராட்ட கூடிய,  ஒரு சித்தனை தேடுனேன், ஒரு அன்பு படலம் தேடுனேன் .  ஏதோ ஒரு தடை,  மொழி ஆளுமை இன்மை என்னை பின்னோக்கி தள்ளியது.  அது என்னுடைய மன தடையே.  


சங்கரபாண்டியபுரம் ல இருக்கும் போது ஒரு அன்பு படலம் பள்ளியில இருந்தது.  ஆனா பெரியப்பா வீட்டுல அழுத்தம் இருந்தது.  அங்க இருந்து ஓடி வந்திட்டேன்.  அதுக்கு அப்புறம் மேட்டுப்பட்டி பள்ளியில படிச்சிட்டு விளையாண்டுட்டு மனம் போனா போக்குல தான் இருந்தேன்.  அதுக்கு அப்புறம் சாத்தூர் பள்ளிக்கூடத்துல,  புது இடத்துல அன்பு படலதுக்காக ஏங்கி என் வாத்தியார் கிட்ட போய் அழுதேன்.  ஒரு வழியா எனக்குள்ள ஏத்துக்குட்டேன். நல்லா படிச்சேன்.  அதுக்கப்புறம் கல்லூரி குளிர் பூமி,  அதனால இந்த கடினம் இல்ல.  வேலைக்கு வந்ததுக்கு அப்புறம் ஒரு சித்தன தேடுனேன்,  அன்பு படலம் தேடுனேன்,  10 வருசம் மேல ஆச்சு.  நான் இப்ப தான் தயார் ஆனேன் போல, அட்ரிஸ் கூட ஒரு நட்பு,  அவர் எனக்கு வலது மற்றும் இடது ரெண்டுமே முக்கியம்னு சொன்னாரு. 

இன்னொன்னு வீரா என்கிட்டே சொன்னாரு,  மத்தவங்க உன்ன ஏத்துக்க மாற்றங்கனு சொல்ற,  நீ மத்தவங்கள ஏத்துக்கிட்டயானு கேட்டாரு. அதுக்கப்புறம் என் பணி சூழலை அப்படியே ஏத்துக்குட்டேன். 

இப்பல்லாம் non violent ah இருக்க மொழி கத்துக்குறேன். 

Popular posts from this blog

scrum impediments

மனமும் இதயமும் தூரம் உள்ளவன்

பணம் என்ற முதலுதவி