மனமும் இதயமும் தூரம் உள்ள மாட்டை திங்கும் ஆடு நான். என்னதான் மாட்டை தின்றாலும் ஆடுகள் ஒருநாள் வெட்டப்படும் என்று எனக்கு நன்கு தெரிந்தே இருக்கிறது. என்னைப்போன்றே என் உறவினர்களும் மனமும் இதயமும் தூரம் உள்ளவர்கள்தான். உறவுகூட்டத்தில் இருந்த வெகு சில தியாகிகளின் நிழலில் காலம் தள்ளுகிறோம் என்பது என்னைபோன்ற ஆடுகளுக்கு பின்னாளில் தெரியநேர்ந்தது. காலத்தின் சுழற்சியில் பணம் இருந்தால் கஷ்டத்தை போக்கிகொள்ளலாம் என்ற ஆசையில் பணத்தை தேடி, இக்கணம் கையில் இருப்பதை மதிக்காது புதிய கஷ்டங்களை உருவாக்கி கொண்டிருந்த பைத்திய கூட்டம் நாங்கள். பணம் இருந்தால் தான் கஷ்டப்படும் உறவை தூக்கிவிட முடியும் என்ற ஆசையும். அதற்காகவே பணம் ஈட்ட எங்களை நாங்களே விரட்டினோம். ஆனால் எதிலாவது கஷ்டம் இருக்கிறதா என்ற சுயபரிசோதனை செய்ய மறந்தோம்😀. பணம் கிடைத்தாலும் அதை பயன்படுத்திகொள்ள தெரியாத கவனமற்ற அறிவீலி கூட்டத்தின் அழுத்தத்தில் ஒரு நியாயம் இருப்பதாக தோன்றினாலும் முட்டுகொடுக்க மறந்ததில்லை என்பது இன்னொரு உண்மை. இந்த பணம் கிட்டியவுடன் என் நெருங்கிய சமூகம் தன் சொந்த வாழ்க்கையின் மேல் control இழந்துவி...